[ad_1]
'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த நான்கு தினங்களுக்கு மழை பொழியும்' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாகக் கடுமையான மழை பெய்துவருகிறது. அதனால், சென்னை புறநகர் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்த நிலையில், மழைகுறித்து தெரிவித்த வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன், 'மேலடுக்குச் சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய வட கடலோரப் பகுதிகளில் மிகக் கடுமையான மழை இருக்கும். சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்களில் கன மழை இருக்கும். மேலும் மூன்று நாள்களுக்கு கனமழை தொடரும்' என்று தெரிவித்தார். ஏற்கெனவே, சென்னையில் பெய்த மழையின் காரணமாக வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு நாள்களுக்கு மழை பொழியும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
அடுத்த நான்கு நாள்களுக்கு மழை தொடரும்..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
TAGS :
COMMENTS