[ad_1]
கன்னியாகுமரியில் நேற்று முதல் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் திரிவேணி சங்கமத்தில் கடலில் புனித நீராடிவிட்டு அதிகாலை சூரிய உதயத்தை ரசித்தனர். அதன்பின்பு பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். உள்ளூர் ஐயப்ப பக்தர்களும் பகவதியம்மன் கோயில் பூசாரியிடம் மாலை அணிவித்து விரதம் தொடங்கி உள்ளனர். ஐயப்ப பக்தர்கள் பூம்புகார் கப்பல் படகு போக்குவரத்து மூலம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் சிலையை பார்க்கச் சென்றனர்.
அதிகளவு அய்யப்ப பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருவதால் கன்னியாகுமரி சீசன் களை கட்டியது. கன்னியாகுமரியில் சீசன் தொடங்கிய பின்னரும் திரிவேணி சங்கம கடலில் பாதுகாப்பு மிதவைகள் இன்னும் போடப்படவில்லை. இதனால் திரிவேணி சங்கமத்தில் குளிக்கும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு கேள்விகுறியாக உள்ளது. பாதுகாப்பு கருதி 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஐயப்ப பக்தர்களால் களைகட்டிய கன்னியாகுமரி..! | Ayyappa devotees gathered in Kanyakumari
TAGS :
COMMENTS