[ad_1]
பெருமைக்குரிய புக்கர் பரிசைப் பெற்ற முதல் இந்தியர் எனும் புகழுக்கு உரியவர் அருந்ததி ராய். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவலுக்கு அளிக்கப்படும் சர்வதேச விருதான புக்கர் பரிசு, இவரது தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் எனும் நாவலுக்குக் கிடைத்தது. இந்த நூல் தமிழில் சின்ன விஷயங்களின் கடவுள் எனும் தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அருந்ததி ராயின் அப்பா ராஜிப் ராய் வங்காளத்தைச் சேர்ந்தவர். அம்மா மேரி கேரளத்தைச் சேர்ந்தவர். 1961 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி ஷில்லாங்கில் பிறந்தார் அருந்ததி ராய். ஆனால், இவர் பிறந்த ஓரிரு ஆண்டுகளில் பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதனால் அம்மாவோடு கேரளத்துக்கு அழைத்துவரப்பட்டார். பள்ளிப் படிப்பை கேரளம், தமிழகத்தில் முடித்தார். டெல்லியில் கட்டட கலைக்கான படிப்பை முடித்து, அங்கேயே பணியிலும் சேர்ந்தார்.
கட்டடக் கலைக்குப் படித்தார் என்றாலும் சினிமா மீது அருந்ததி ராய்க்கு ஈடுபாடு இருந்தது. 84 ஆம் ஆண்டு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணாவைச் சந்திக்கும் அருந்ததி அவரோடு சில திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சி படங்களும் திரைக்கதை எழுதுகிறார். எந்தச் சூழ்நிலையிலும் சமூகம் சார்ந்த அக்கறையோடே இயங்குகிறார். அது குறித்த படைப்புகளை எவருக்கும் அஞ்சாமல் துணிவோடு எழுதி வந்தார். அதன்மூலம் பல எதிர்ப்புகளையும் சம்பாதித்துக்கொண்டார்.
நர்மதை நதியில் அணைகள் கட்டும் அரசின் முயற்சியால் ஏராளமான எளிய மனிதர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்காக மேதா பட்கர் களத்தில் இறங்கி, ‘நர்மதா பச்சாவோ' எனும் பெயரில் போராடினார். அவரோடு தன்னை இணைத்துக்கொண்டார் அருந்ததி ராய். அதேபோலக் காடுகளின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்கு எதிராகத் தன் குரலை அழுத்தமாகப் பதிவு செய்தார். அந்த இடத்தில் வனத்தையும் வனவாசிகளையும் காக்க போராடும் மாவோயிஸ்டுகளுடன் உரையாடவும் செய்தார். இதற்கு நாடு முழுக்க ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்தது. இது குறித்து அவர் குறிப்பிடும்போது, 'நம்முடைய அரசு காட்டின் வளங்களைப் பெரிய நிறுவனங்களிடம் விற்க நினைக்கிறது. ஆனால், பயங்கரவாதிகள் எனச் சொல்லப்படுபவர்கள் அவற்றைக் காக்க போராடுகிறார்கள். நியாயத்தின் பக்கம் நான் பேச விரும்புகிறேன்' என்கிறார். இப்படிக் கூறினாலும் மாவோயிஸ்ட்டுகளின் ஆயுத வழி போராட்டம் பற்றிய தம் கருத்துகளைக் கூற தயங்கியதேயில்லை.
அருந்ததி ராயின் எழுத்துகளுக்காக ஜோதிராவ் புலே விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். அமைதிக்கான ‘குளோபல் ஹ்யூமன் ரைட்ஸ்’ விருது அவற்றில் முக்கியமானது. 2006 ஆம் ஆண்டு இவரின் கட்டுரைத் தொகுப்புக்காக மத்திய அரசு சாகித்ய அகாடமி விருதை அளிக்க முன் வந்தது. ஆனால், மக்கள் விரோத கொள்கைகளைத் தொடர்ச்சியாக நடைமுறை படுத்தி, நாட்டையே சீரழிக்க அரசிடமிருந்து இந்த விருதைப் பெற மாட்டேன் எனத் தீர்க்கமாக மறுத்தார். சிலர் சமாதானங்கள் செய்ய முயன்றாலும் தன் முடிவை மாற்றிக்கொள்ள வில்லை. எந்தவொரு விருதையும் எவரால் தரப்படுகிறது என்பதை அறிந்தே பெற்றுக்கொள்வதில் சமரசம் செய்துகொள்ளவதில்லை.
எழுத்து மட்டுமல்லாமல், குழந்தை தொழிலாளர் பிரச்னைகள், அணு உலை எதிர்ப்பு, சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கு எதிரான நிலைப்பாடு எனத் தன் வாழ்க்கையை மக்களுக்கான போராட்டக் களத்தில் இயங்குவதற்கு என மாற்றிக்கொண்டவர் அருந்ததி ராய்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
எழுத்து, சினிமா, போராட்டம்..! இயங்குவதையே வாழ்வாக்கிக் கொண்ட அருந்ததி ராய் #ArundhatiRoyBDay
TAGS :
COMMENTS