[ad_1]





இத்தாலி சூப்பர்ஸ்டார் ஆன்ட்ரூ பிர்லோ கால்பந்து விளையாட்டுக்கு விடை கொடுத்துள்ளார். அவருக்கு வயது 38.




இத்தாலி மிட்பீல்டர் ஆன்ட்ரூ பிர்லோ, இரு ஆண்டுகளாக நியூயார்க் சிட்டி அணிக்காக விளையாடி வந்தார். முன்னதாக ஏ.சி. மிலன், இன்டர்மிலன், ஜூவான்டஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதில், ஏ.சி.மிலன் அணிக்காக விளையாடியபோது இரு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையைக் கைப்பற்றினார். 2006-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இத்தாலி அணியிலும் பிர்லோ இடம் பிடித்திருந்தார். 

பிர்லோ ஃப்ரீகிக் மற்றும் பெனால்டி ஸ்பெஷலிஸ்ட். நடுக்களத்தில் அபாராமாக விளையாடக் கூடியவர். மிக நேர்த்தியான பாஸ்களையும் கோல் வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும் மிட்ஃபீல்ட் மேஸ்ட்ரோ. ஓய்வுகுறித்து வெளியிட்டுள்ள ட்விட் பதிவில்''  எனக்கு ஆதரவாக இருந்த பயிற்சியாளர்கள், சக வீரர்கள், உதவியாளர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் '' என பிர்லோ தெரிவித்துள்ளார். 

பிரெஸ்சிகா அணியுடன் கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கிய பிர்லோ, 2011-ம் ஆண்டு ஜூவான்டஸ் அணியில் இணைந்த பிறகு, 4 முறை சீரி ஏ கோப்பையை கைப்பற்றினார். 2015-ம் ஆண்டு ஜூவான்டஸ் சீரி ஏ கோப்பையை வென்றதுடன் ஜூவான்டஸ் அணிக்கு விடை கொடுத்தார்.


இத்தாலி அணிக்காக 13 ஆண்டுகளில் 116 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ள பிர்லோ, 13 கோல்களையும் அடித்துள்ளார். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்