[ad_1]
நிதி நெருக்கடி காரணமாக இந்தியாவில் உள்ள ஏர்செல் நிறுவனங்களை மூட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வுச் சந்தையாக தற்போது தொலைத் தொடர்பு துறை வளர்ந்து வருகிறது. இந்தத் துறையைப் பிடிப்பதில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களெல்லாம் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், இதே துறையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது நிறுவனக் கிளைகளை மூட முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெரும் கடன் சுமையிலிருந்து வெளியே வரவும், தொழிலைக் காப்பாற்றிக்கொள்ளவும் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதற்கு முடிவு செய்தது. ஆனால், சட்டம் மற்றும் ஒழுங்குமுறை ரீதியிலான நிச்சய மற்றத் தன்மை, இந்த இரு நிறுவனங்களின் முதலீடுகளில் இருக்கும் சிக்கல் ஆகியவை காரணமாகவும் ஏர்செல் நிறுவனம் இந்த இணைப்புக்கெதிரான நிலைப்பாட்டை எடுத்ததாலும் ஒப்பந்தம் ரத்தானது.
இந்நிலையில் இரண்டு நிறுவனங்களும் நிதி நெருக்கடியால் தவித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் இருந்தே வெளியேறிவிடலாம் என்ற முடிவில் ஏர்செல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு பைபை சொல்கிறதா ஏர்செல்? | Aircel to shutdown in India
TAGS :
COMMENTS