[ad_1]
9 வயது மகளை பலாத்காரம் செய்து கொன்று, கடலில் வீசிய கொடூர தந்தைக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ராமேஸ்வரம் கரையூர் பகுதியை சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து (51). இவரது மனைவி தனுஷ்பானு. இவர்களுக்கு 8 குழந்தைகள். கடந்த 2013-ம் ஆண்டு கணவன் மனைவி இடையே தகராறு எழுந்துள்ளது. இதையடுத்து தனுஷ்பானு, தனது 9 வயது மகளையும், மகனையும் கரையூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த மாரிமுத்து தனது மகளுக்கு டீ வாங்கி கொடுப்பதாக சொல்லி அங்கிருந்து அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், மறுநாள் அப்பகுதியில் உள்ள கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்த ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலைய போலீஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி சந்தேக மரணம் என பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக மாற்றம் செய்த போலீஸார் கொல்லபட்ட சிறுமியின் தந்தை மாரிமுத்துவைக் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மாரிமுத்து மீதான குற்றம் நிரூபணம் ஆன நிலையில், இன்று தீர்ப்பு வழக்கப்பட்டது. சிறுமியைக் கடத்திய குற்றத்திற்கு மாரிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், பலாத்காரம் செய்யப்பட்ட குற்றத்திற்கு மற்றொரு ஆயுள் தண்டனையும், சொந்த மகளையே கொலை செய்த குற்றத்திற்கு தூக்கு தண்டனை யும் விதித்து ராமநாதபுரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) கயல்விழி தீர்ப்பளித்தார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
’9 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை’ - ராமநாதபுரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
TAGS :
COMMENTS