[ad_1]
நடிகர் விஜயின் மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பான அதிரிந்திக்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் மூன்று வேடங்களில் விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியானது. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என்று கூறி பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்தக் காட்சிகளை நீக்க வேண்டியதில்லை என்று கூறி நாடு முழுவதுமிருந்து படக்குழுவுக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்தன. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முதல் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரை பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் பா.ஜ.க-வின் இந்தச் செயல்பாடு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறினர்.
அதேநேரம், மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பான அதிரிந்தி படம் 27-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதாக தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்தது. தணிக்கைச் சான்றிதழ் கிடைக்க தாமதம் ஏற்பட்டதால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதிரிந்தி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க திட்டமிட்டே தாமதப்படுத்தப்படுவதாக விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த மத்திய தணிக்கை வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி, ‘தமிழ்ப் பதிப்புக்குக் கிடைத்தது போலவே தெலுங்கு மெர்சல் பதிப்புக்கும் நியாயமான முறையில் விரைவில் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும். சான்றிதழ் வழங்குவதில் உள்ள வழக்கமான நடைமுறைகளே தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது’ என்று கூறியிருந்தார். இந்தநிலையில், அதிரிந்தி படத்துக்குத் தமிழைப் போலவே யு/ஏ சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் அளித்துள்ளது. இதனால் அதிரிந்தி படம், வரும் 9-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
தெலுங்கு மெர்சலுக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது! நவ.9-ல் ரிலீஸ்
TAGS :
COMMENTS