[ad_1]





Rameswaram: இலங்கை கடற்படையினரின் தொடர் சிறை பிடிப்பு சம்பவங்களால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.கடலில் பருவ நிலை மாறுபாட்டால் அருகி வரும் மீன் இனங்கள், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலை, எவ்வளவு நல்ல நிலையில் மீன்களை கொண்டுவந்தாலும் குறைந்த விலையினையே நிர்ணயிக்கும் ஏற்றுமதி நிறுவனங்கள், கடல் சீற்றம் என பல்வேறு இன்னல்களை பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சந்தித்து வருகின்றனர். இவற்றை எல்லாம் தாங்கி கொண்டு உயிர் வாழ வேறு வழியின்றி நாள்தோறும் கடலுக்கு செல்லும் மீனவர்கள் தொடர்ந்து வரும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளால் கரை திரும்புவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.






இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகினையும் அதில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் இன்று காலை சிறை பிடித்து சென்றுள்ளனர். சிறை பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் பருத்திதுறை பகுதி கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொன்டு செல்லப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் பிடிக்கப்படும் மீன்களில் பெருமளவு கேரள மார்கெட்டுகளுக்கு வாகனங்கள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது இவ்வாறு எடுத்து செல்லபடும் வாகனங்களுக்கு  ஜி.எஸ்.டி வரிவிதிக்கப்படுவதற்கு  எதிராக கேரளாவில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் பகுதியில் குறைந்த அளவிலான படகுகளே மீன்பிடிக்க சென்றுள்ளன. இதனால் மீன்பிடி தொழிலை நம்பியிருக்கும் மீனவர்கள் மட்டுமல்லாது அதனை சார்ந்துள்ள தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.இந்த சூழலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக சிறைபிடித்து செல்வது தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்