[ad_1]





Ariyalur: தொலைந்து போன சிறுவர்களை 8 மணிநேரத்தில் மீட்ட ஜெயங்கொண்டம் போலீஸாருக்கு குழந்தைகளை மீட்டதில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

                        



அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆண்டிமடம் விளந்தை அக்ரஹாரத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் சிவசக்தி 4-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் தன் நண்பன் ராமு மகன் ராமகிருஷ்ணன் என்பவனுடன் சேர்ந்து விளையாடச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற சிறுவன், வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சிவசக்தியைத் தேடி ராமகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு ராமகிருஷ்ணனையும் காணவில்லை. 


இதுகுறித்து சிவசக்தி தாய் லதா ஆண்டிமடம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடி தலைமையில் ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் நித்யா உள்ளிட்ட போலீஸார் சிறுவர்களை யாராவது கடத்திச் சென்றனரா,அல்லது ஏரிகுளங்களில் மூழ்கியுள்ளனரா எனத் தேடிவந்தனர். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளைத் தேட நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறார் டி.எஸ்.பி.அதன் பேரில் நேற்று காலையில் திருமுட்டம் சாலையில் நடந்து சென்ற சிறுவனை போலீஸார் விசாரித்து அழைத்து வந்தனர். மேலும் விசாரித்தபோது 2 சிறுவர்களும் விளையாடச் சென்று நேரமானதால் வீட்டுக்கு சென்றால் அம்மா, அப்பா அடிப்பார்கள் என்று பயந்துகொண்டு. அதே கிராமத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றின் திண்ணையில் இரவு முழுதும் தூங்கி விடியற்காலை ராமகிருஷ்ணன் மட்டும் கடைவீதியில் நடந்த சென்றபோது அவனின் உறவினர் பார்த்து உன்னைத்தான் இரவு முழுதும் தேடி வருகின்றோம் எனக் கூறி காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தார். மற்றொரு சிறுவனையும் போலீஸார் அழைத்து வந்தனர். இருவரையும் போலீஸார் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இரவு முழுதும் தேடிப் பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸாருக்குப் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துச் சென்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");