[ad_1]





Chennai: ஜெயலலிதா மரணம் தொடர்பாக 70-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளதாக, விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. 


 


ஜெயலலிதா உயிரிழந்து ஓர் ஆண்டு ஆக உள்ள நிலையில், அவர் மரணம் தொடர்பான மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமல் உள்ளன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, தமிழக அரசு செப்டம்பர் 29-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த விசாரணை ஆணையம், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை, சிகிச்சை முறை, மரணத்துக்கான காரணங்கள்குறித்து விசாரணை நடத்தி, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிடப்பட்டது. விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விளக்கம் கேட்டு, 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜெ, மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு, தி.மு.க-வைச் சேர்ந்த மருத்துவர் சரவணன் உட்பட  இதுவரை  8  பேர் பிரமாணப்பத்திரங்களை அனுப்பியுள்ளனராம். 70-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளதாகவும், வரும் 22-ம் தேதி, சரவணன் ஆஜராகி விளக்கமளிக்க அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.  மற்றவர்களுக்கும் நேரில் ஆஜராகி விளக்கம்கொடுக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாம்.
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");