[ad_1]
Kancheepuram:
சசிகலாவுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், இன்று மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றுவருகிறது. முதல்நாள் 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இன்றும் குறிப்பிட்ட சில இடங்களில் சோதனையைத் தொடர்ந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் உள்ள சசிகலா குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையில் நேற்று முன்தினம் காலை 6 மணியிலிருந்து இரவு 11.30 வரை சோதனை நடத்தினர். ரெய்டு முடிந்ததும், ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்து டாக்குமென்ட்டுகளை அதிகாரிகள் அள்ளிக்கொண்டு சென்றார்கள். அந்த டாக்குமென்ட்டுகள், புறநகர் பகுதியில் ரகசிய இடம் ஒன்றில் வைத்து ஆய்வுசெய்துவருகிறார்கள். இந்த நிலையில், நேற்று காலை 11.30 மணிக்கு மீண்டும் மிடாஸ் கம்பெனியில் சோதனை செய்தனர். அப்போது, முக்கிய நிர்வாக அலுவலர்களை கம்பெனிக்கு வரவழைத்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்கள். மதியம் 2 மணிக்கு சோதயைத் தொடங்கிய அதிகாரிகள், மிடாஸ் கம்பெனிக்கு பாட்டில் சப்ளை செய்யும் சாய் என்டர்பிரைசஸ், அட்டைப்பெட்டி சப்ளை செய்யும் சாய் கார்ட்டன் உள்ளிட்ட இடங்களிலும் சோதனைசெய்தனர். இதன் காரணமாக, மூன்று நாள்கள் மிடாஸ் நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 1.30 மணிக்கு சோதனை முடிந்தது. இந்த நிலையில், மூன்றாம் நாளான இன்று காலை 11.30-க்கு தொடர்ந்து மிடாஸ் நிறுவனத்தில் சோதனை நடைபெற்றுவருகிறது. மிடாஸ் மேலாளர் காமராஜ் உட்பட முக்கிய 7 நிர்வாகிகளை வீட்டுக்கு அனுப்பாமல் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைசெய்துவருகிறார்கள். கைப்பற்றிய ஆவணங்களை வைத்து, அவர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்திவருகின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மிடாஸ் நிறுவனத்தின் 8 அதிகாரிகள்! ஐ.டி அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை
TAGS :
COMMENTS