[ad_1]
உயர் மதிப்புள்ள 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை 80 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்தியத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் அக்டோபர் மாதம் வரையிலும் நாடு முழுவதும் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. சென்ற 2016-17-ம் நிதி ஆண்டில் நடைபெற்ற மொத்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் மதிப்பே 1,000 கோடி ரூபாய் தான். ஆகவே, இந்த நிதி ஆண்டில் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனை 800 கோடி ரூபாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.பி.ஐ, ஐ.எம்.பி.எஸ், மணி வேலட், பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய 'பீம் ஆப் 'மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி அதிக அளவில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாயின்ட் ஆப் சேல்ஸ் இயந்திரம் மூலமான பரிவர்த்தனை அளவும் அதிகரித்துள்ளது. இதில் சுவையான விஷயம் என்னவென்றால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையத் தொடங்கிய மார்ச், ஏப்ரல் மாதங்களில் இருந்து தான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.
“டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறுங்கள்... மாறுங்கள்...”என்று நவம்பர், டிசம்பர் மாதங்களில் பிரதமரும், நிதி அமைச்சரும் வலியுறுத்தியப்போது, அதையாரும் கண்டுகொள்ளவில்லை போலும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் தலா 156 கோடி ரூபாய் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. அதன்பிறகு, சராசரியாக மாதத்துக்கு 136 கோடி ரூபாய் முதல் 138 கோடி ரூபாய் வரை மின்னணு முறையில் பரிமாற்றப்பட்டுள்ளது. மத்தியத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
-பிரதீப்
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதிரொலி : 80 % அதிகரித்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை! | #Demonetisation
TAGS :
COMMENTS