[ad_1]
Chennai: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கில் சபாநாயகர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி தலைமையிலான அரசுக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த காரணத்தால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதிநீதிக்கம் செய்தார். இதையடுத்து, ஆளும் அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'இந்த வழக்கு தொடர்பாக சபாநாயகர், அரசு தலைமைக் கொறடா, குறிப்பிடப்பட்ட 7 எம்.எல்.ஏ-க்கள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
7 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு..! சபாநாயகர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
TAGS :
COMMENTS