[ad_1]

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்பட உள்ளது.




முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் சிறையிலிருந்தார். இந்த நிலையில், தந்தை உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், இதனால் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தார். அவரது கோரிக்கையைப் பரிசீலனை செய்த தமிழக அரசு, நிபந்தனையுடன் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் விடுவித்தது. இதையடுத்து, தந்தை குயில்தாசனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், பரோலை நீட்டிக்கக்கோரி தமிழக அரசுக்குப் பேரறிவாளன் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கியது. 


இதன் பின்னர் பரோல் நிறைவடைந்து மீண்டும் சிறைக்குத் திரும்பினார் பேரறிவாளன். இந்த வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை மீதான இறுதிக்கட்ட விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.