[ad_1]

ராமநாதபுரம் அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 7 வயது சிறுமி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் நடராஜன் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் பகுதிகளில் ஆய்வு செய்வதுடன் காய்ச்சல் பரவ காரணமாக இருப்போருக்கு அபராதமும் விதித்து வருகிறார். இதனால் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் கடற்கரை பகுதியை சேர்ந்தவர் ஆரிப். இவரது மகள் அஸ்ரா (7)  தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமி அஸ்ராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உள்ளூரில் சிகிச்சை அளித்து குணம் ஆகாததால் பின்னர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி அஸ்ரா அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிறுமி அஸ்ரா டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிறுமி அஸ்ரா  இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். சிறுமியின் உயிரிழப்பு அவரது குடும்பத்தை மட்டுமல்லாது அஸ்ரா வசித்து வரும் பகுதியை சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");