[ad_1]
இமாசலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 74 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.
இமாசலப்பிரதேச சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50,25,941 ஆகும். மொத்தம் 7,525 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் 37,605 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மொத்தம் 74 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இப்போதைய முதல்வர் வீரபத்ர சிங்கும், பா.ஜ.க சார்பில் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமலும் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டுள்ளனர். வீரபத்ரசிங் ராம்பூர் தொகுதியிலும், பிரேம் குமார் துமல் சமீர்பூர் பகுதியிலும் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்தனர். வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று குஜராத் மாநிலத் தேர்தல் முடிவுகளும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
இமாசலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 74 சதவிகித வாக்குகள் பதிவு
TAGS :
COMMENTS