[ad_1]
ஈரான் - ஈராக் எல்லைப் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கதார் வரை உணரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஈராக் பகுதியில் இருக்கும் குர்தீஷ் அரசால் நிர்வகிக்கப்படும் சுலைமணியா நகரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுலைமணியாவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி 9.18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவல்களும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், இதுவரை 6 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறி வருகின்றன. இதனால், ஈராக்கில் பரவலாக மின்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஈரான் - ஈராக் எல்லையில் 7.2 ரிக்டர் நிலநடுக்கம்!
TAGS :
COMMENTS