[ad_1]


இந்தியாவிலேயே முதன்முறையாக,  இந்த வழக்கில்தான் மருத்துவர்களுக்குத் தண்டணை வழங்கப்பட்டுள்ளது.Tiruchirappalli: 

கடந்த 2008 ஜூலை  28-ம் தேதி, பெரம்பலூர்  ஜோசப் கண் மருத்துவமனையும் விழுப்புரம் பார்வை இழப்புத் தடுப்புச் சங்கமும் இணைந்து, விழுப்புரம் மாவட்டம்  கடுவனூர்   அரசு உயர்நிலைப் பள்ளியில்  இலவச கண்மருத்துவ சிகி்ச்சை  முகாம் நடத்தியது. இந்த முகாமில்,  1000-கும்  மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதாக கணக்கு காட்டப்பட்டது.  அதில், கண்ணில் குறைபாடு உள்ளதாக  66 பேரை தேர்ந்தெடுத்து, பெரம்பலூர்  ஜோசப் கண் மருத்துவமனைக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய  அழைத்துவரப்பட்டார்கள்.  அவர்களுக்கு,  அறுவைசிகிச்சைக்குப் பிறகு கண்ணில் சீல் வடிந்து, பார்வை பறிபோனது. எட்டு வருடங்களுக்கு முன்,  மத்திய மாநில அரசுகளை உலுக்கிய இந்தப் பிரச்னை வெளியானவுடன், அப்போதைய தி.மு.க அரசு 1 லட்சம் நஷ்ட ஈடு வழங்கியது.  பிறகு, அப்போதைய பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி டீன் பாலசுப்ரமணியன் தலைமையில் ஒரு குழுவும், மாநில பார்வை இழப்புத் தடுப்புச் சங்க திட்ட இயக்குநர் பர்வதம் தலைமையிலான  இன்னொரு குழுவினரும், தனித்தனியே பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனையில் நேரில் விசாரணை நடத்தினர்.  இந்த விசாரணையில், அந்த  இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கவில்லை என்றும், அறுவை சிகிச்சைக்கு முன்பாக நோயாளிகளுக்குச் செய்ய வேண்டிய ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு  உள்ளிட்ட முறையான பரிசோதனைகள் செய்யப்படவில்லை என்றும்,  கண் மருத்துவ முகாம் நடக்கும்போது வேடிக்கைபார்க்க வந்தவர்களைக்கூட வலுக்கட்டாயமாக அழைத்துவந்து சிகிச்சை அளித்தது உள்ளிட்ட பல விதிமுறை மீறல்களைச் சுட்டிக்காட்டியது.


அதில்,  66 பேருக்கும் கண்ணில் சூடோமோனோ என்ற நோய்த்தொற்று ஏற்பட்டதன் விளைவுதான், நிரந்தரமாக பார்வை பறிபோகக் காரணம் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.  இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு  மையம்  சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும்,  இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்கவும்  உத்தரவிட்டது. அதன்பிறகு ,சி.பி.ஐ  டி.எஸ்.பி., பிரதீப் குமார்  தலைமையிலான  குழு விசாரணை நடத்தி, இந்த வழக்கில் ஜோசப் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நெல்சன் ஜேசுதாசன்,  டாக்டர் அவ்வை, அந்த  மருத்துவமனை நிர்வாகி கிறிஸ்டோபர் தாமஸ், பெரம்பலூர் ஜோசப் கண்மருத்துவமனை மருத்துவர் டாக்டர் அசோக்,, டாக்டர் சௌஜன்யா,  டாக்டர் தென்றல்,  ஆன்ரோஸ் உள்ளிட்டோர்மீது  சி.பி.ஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில், சி.பி.ஐ தரப்பில், 137 சாட்சிகள் சேர்க்கப்பட்டு,  அதில் 33 பேர் சாட்சியம் அளித்தனர். மேலும், கடந்த  22.04.2015 அன்று, ஜோசப் கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நெல்சன் ஜேசுதாசன், மருத்துவமனை நிர்வாகி கிறிஸ்டோபர் தாமஸ், டாக்டர் அசோக் ஆகியோருக்கு தலா, ஓராண்டு சிறை தண்டனை என்றும், அரசு தரப்பில் போதிய ஆதாரம் காட்டப்படாததால், டாக்டர்கள் சௌஜன்யா, தென்றல், அவ்வை மற்றும் ஆன்ரோஸ் ஆகியோரை விடுதலைசெய்தும் உத்தரவிட்டதோடு,  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்கள் சௌஜன்யா, தென்றல் ஆகியோர்மீது இந்திய மருத்துவக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி குற்றவியல் தலைமை நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பு வழங்கினார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஜேசுதாஸ் உட்பட 3 பேர் அந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.  அந்த மனு, இன்று திருச்சி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த  திருச்சி  3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன், மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடிசெய்தும், அவர்களுக்கு வழங்கப்பட்ட  ஓராண்டு  தண்டனையை உறுதிசெய்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 9 கோடியே 85 இலட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.


இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட மருத்துவர்களுக்கும் தண்டனை உறுதிசெய்யப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");