[ad_1]
உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 23-வது கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ‘மக்கள் அதிகம் பயன்படுத்தும் 178 பொருட்களுக்கான வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கிரைண்டர் மீதான வரி விதிப்பு 28 சதவிகிதத்திலிருந்து, 12 சதவிகிதமாக குறைகிறது.
நாடு முழுவதும் உள்ள உணவகங்களுக்கு ஒரே சீராக 5 சதவிகித வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் உணவகங்கள் உள்ளீட்டு வரி விதிப்பு சலுகைகளைப் பெற முடியாது. அதேபோல், நாள் வாடகை ரூ.7,500-க்குக் குறைவாக உள்ள விடுதிகளுக்கான வரி 18 சதவிகிதமாகிறது. இந்த புதிய வரி விதிப்பு வரும் 15-ம் தேதி முதல் அமலாகிறது’ என்று தெரிவித்தார். முன்னதாக, குளிர்சாதன வசதி கொண்ட உணவகங்களுக்கு 18 சதவிகிதமும், குளிர்சாதன வசதி இல்லாத உணவகங்களுக்கு 12 சதவிகிதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகக்து.
விலை குறையும் ஹோட்டல் உணவு வகைகள்! ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதமாகக் குறைப்பு
TAGS :
COMMENTS