[ad_1]







அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா.நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்தவர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வளைந்து கொடுக்காதவர். அவருடைய இந்த நேர்மையான குணம்தான் அவரைப் பலவித இன்னல்களைச் சந்திக்க வைத்துள்ளது. 52 வயதாகும் கெம்கா இதுவரை 51முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய இந்தப் பணியிட மாற்றம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் கெம்கா. அந்தப் பதிவில் 'நிறைய பணிகளைச்செய்ய திட்டமிட்டிருந்தேன். அதற்குள் இடமாற்றச் செய்தி. மறுபடியும் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்து தற்காலிகமானதுதான். அதனால் புதிய உத்வேகத்துடன் மீண்டும் பணிகள் தொடரும்' என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 




இதற்கு முன்பு, ஹரியானா அரசின் சமூகநீதி மற்றும்பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் முதன்மைச் செயலராகப் பணியாற்றி வந்த அசோக் கெம்கா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார். சமூக நீதி மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர் கிருஷ்ணபேடி, அரசு வாகனத்தை ஒருவருடமாகச் சொந்தப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தி வந்ததாக அவர்மீது கெம்கா பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். இந்தநிலையில்தான், பி,ஜே,பி, அரசு அவரை இடமாற்றம் செய்துள்ளது .  


ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது அரசு நிலத்தைக் குறைந்த விலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட்  வதேராவின் நிறுவனம் வாங்கியது. பின்னர் குர்கான் மாவட்டம் மானேசர் பகுதியில் உள்ள அந்த 2.7 ஏக்கர் நிலத்தை டி.எல். எப் நிறுவனத்துக்கு ரூபாய் 58 கோடிக்கு ராபர்ட் வதேரா விற்றார். இந்த நில விற்பனை சட்டவிரோதமானது எனக் கூறி நகர்ப்புற திட்டமிடல் துறைக்குப் பொறுப்பு வகித்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா ரத்து செய்தார். இதன்காரணமாக, அவரை அந்தத் துறையிலிருந்து மாற்றியதோடு, சட்டரீதியான நடவடிக்கையிலும் ஈடுபடுத்தியது அப்போதைய காங்கிரஸ் அரசு. கெம்காவின் நேர்மையான குணம் பிடிக்காத ஆட்சியாளர்கள், அவரைத் தொடர்ந்து பந்தாடி வந்தாலும் அதைக் கருத்தில் கொள்ளாமல் கொடுக்கப்பட்ட  பணியைத் திறம்படச் செய்யத் தொடங்கி விடுவார்.
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");