[ad_1]
Chennai: 2019-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் நம் நாட்டில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் முக்கியப் பங்கு வகிக்கப்போகின்றன.
தென் ஆப்பிரிக்க தேர்தலுக்கும் இந்தியாவில் செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கிறீர்களா? தொடர்பு இருக்கிறது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். இந்தச் செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டு இப்போது ரிசர்வ் வங்கி வசம் உள்ளன. மலையாகக் குவிந்துக் கிடக்கும் இவற்றை எரித்தால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்பதால், என்ன செய்வதென்று குழப்பத்தில் இருந்தனர் ரிசர்வ் வங்கி அதிகாரிகள்.
இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் செயல்படும் கார்ட்போர்டு அட்டை தயாரிக்கும் நிறுவனமும், ரிசர்வ் வங்கியும் ஓர் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளன.அதன்படி, செல்லாத ரூபாய் நோட்டுகளை சிறு,சிறு துண்டுகளாக வெட்டி அந்த நிறுவனத்திடம் ரிசர்வ் வங்கி கொடுத்துவிடும். அந்த நிறுவனம், மரக்கூழுடன், ரூபாய் நோட்டு கழிவைச் சேர்த்து கார்ட்போர்டு தயாரிக்கும். பின்னர் இந்த கார்ட்போர்டுகள், பிளைவுட் அட்டைகள், தென் ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
இது குறித்து தி வெஸ்டர்ன் பிளைவுட் நிறுவனத்தின் பொதுமேலாளர் கூறுகையில், “கார்ட்போர்டுகள், பிளைவுட்கள் அனைத்தும் 2019ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் பொதுத் தேர்தலுக்காக ஏற்றுமதி செய்யப்படும். அங்கு நடக்கும் தேர்தல் பிரசாரத்தின் போது தேர்தல் வாசகங்களை எழுதவும், பதாகைகள் தயாரிக்கவும் இவை பயன்படுத்தப்படும். சவுதி அரேபியாவுக்கும் ஏற்றுமதி செய்யவிருக்கிறோம்” என்றார். ஒரு காலத்தில் கம்பீரமாக வலம் வந்த 500, 1,000 ரூபாய் கடைசியில் கார்ட்போர்ட் தட்டிகளாக மாற இருக்கின்றன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தென் ஆப்பிரிக்க தேர்தலுக்கு உதவ இருக்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள்!
TAGS :
COMMENTS