[ad_1]
Chennai:
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட சட்டப்பேரவை தொடர்பான 5 வழக்குகளையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு பரிந்துரைத்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இரண்டாக பிரிந்து அ.தி.மு.க, சசிகலா சிறைக்குச் சென்றபின் ஒன்று சேர்ந்தது. அ.தி.மு.க-வை பிரித்த பன்னீர்செல்வம் அணியுடன் பழனிசாமி அணி இணைந்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாத டி.டி.வி. தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, 18 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனிடையே, குட்கா விவகாரத்தில் அவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமி மற்றும் ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி, டி.டி.வி. தினரகன் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் ஆகியோரின் அமைச்சர் பதவியை பறிக்கக்கோரி தி.மு.க எம்.எல்.ஏ பிச்சாண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதனிடையே, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு மற்றும் சட்டப்பேரவை நிகழ்வு தொடர்பான வழக்குகளை கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்குமா என்பதுகுறித்து தலைமை நீதிபதி முடிவு எடுப்பார் என்றும் வழக்குகளை கூடுதல் நீதிபதிகள் விசாரித்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறி வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்து பரிந்துரை செய்தார்.
'அமர்வு விசாரித்தால்தான் நன்றாக இருக்கும்'- எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட 5 வழக்குகள் தலைமை நீதிபதிக்கு மாற்றம்
TAGS :
COMMENTS