[ad_1]
Chennai: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை முதல் 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்தது. இதனால், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரிலான விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கின. தலைநகர் சென்னையும், புறநகர்ப் பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கும் சூழல் ஏற்பட்டது. குடியிருப்புப் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். நேற்று முதல் மழை குறைந்துள்ள நிலையில், பல பகுதிகளிலும் வெள்ளம் வடிந்தபாடில்லை. இந்தநிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை (நவம்பர் 10) முதல் 4 நாள்களுக்கு (நவம்பர் 13வரை) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
கடலோர மாவட்டங்களில் 4 நாள்களுக்குக் கனமழை! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்
TAGS :
COMMENTS