[ad_1]

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே இன்று நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.




புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தைச் சேர்ந்தவர் முகம்மதுயூசுப். இவர் இன்று மாலை இண்டிகா காரில் தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். கிழக்குக் கடற்கரை சாலையில் பயணித்த இந்த கார் எஸ்.பி. பட்டிணத்தை அடுத்துள்ள பரப்புவயல் என்னும் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த டாடா சுமோ காரின் மீது மோதியது.


இந்த விபத்தில் முகம்மது யூசுப் குடும்பத்தைச் சேர்ந்த அயூப்கான் (65), சைபுநிஷா (55), ஜாகிராம்மாள் (70), சித்தின் நிலோபர் (8) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஷபீகா என்ற 4 வயது குழந்தை பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்து தொடர்பாக எஸ்.பி.பட்டிணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");