[ad_1]





புதுச்சேரியில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 




புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 145 பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இதில், 55 பேருந்துகள் உள்ளூர் பகுதியான புதுச்சேரியில் இயக்கப்பட்டுவருகின்றன. அவை, ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றும் 200 ஓட்டுநர், நடத்துநர்களால் இயக்கப்பட்டுவருகின்றன. அந்தத் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 5-ம் தேதி ஊதியம் அளிப்பது வழக்கம். ஆனால், இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதைக் கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் கடந்த 18-ம் தேதி திடீரென வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். இதனால், புதுச்சேரியில் உள்ளூர் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 


இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் புதுச்சேரி போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இருப்பினும், தங்களது ஊதியத்தை தினசரி வழங்கும்வகையில் தினக்கூலிகளாக மாற்றும்வரை போராட்டம் தொடரும் என ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், புதுச்சேரி போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், தமிழக அரசுப் பேருந்துகளில் மாற்றிவிடப்படுகின்றனர். இந்த வேலைநிறுத்தத்தால், புதுச்சேரி நகரில் உள்ள மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");