[ad_1]
விபத்தில் சிக்குபவர்களுக்கு முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. சிகிச்சைக்கான கட்டணத்தை கேரள அரசே செலுத்திவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்த சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை செயலாளர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக advanced trauma care வசதிகள் கொண்ட தனிப்பிரிவு கிராம சுகாதார மையம், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படவுள்ளது. விபத்தில் சிக்குபவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. முதல் 48 மணி நேரத்துக்கானக் கட்டணத்தை அரசே செலுத்திவிடும். பின்னர், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து பணம் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும்.
இது குறித்து கேளர முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், 'விபத்தில் சிக்குபவர்களின் பொருளாதார பின்புலங்களை ஆராய்ந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கின்றனர். பணம் இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கிறார்கள். இந்த நிலை நீடிக்கக் கூடாது என்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். யாருக்கும் சிகிச்சையளிக்க மறுக்கக் கூடாது. தனியார் மருத்துவமனைகளுக்கு சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து கட்டணத்தை அரசே செலுத்தும்' என்றார்.
விபத்தில் சிக்குபவர்களை உடனடியாக மீட்க நவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ்களில் advanced life-support care கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சமீபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்றத் தெழிலாளி கொல்லம் அருகே விபத்தில் சிக்கினார். ஆம்புலன்சில் அவரை தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். முருகன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த, தனியார் மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சையளிக்க மறுத்தன. கிட்டத்தட்ட 7 மணி நேரம் சிகிச்சை கிடைக்காத நிலையில் முருகன் ஆம்புலன்சிலேயே மரணம் அடைந்தார்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு முடிவுகட்டும் வகையில் பினராயி விஜயன் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
விபத்தில் சிக்குபவர்களுக்கு முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை - பினராயி உ த்தரவு!
TAGS :
COMMENTS