[ad_1]
ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளில் பல்லாயிரக் கணக்கானோர் மரணம் அடைகிறார்கள். இதற்கு, மேலோட்டமாக அனைவரும் சொல்லும் காரணம், கவனக்குறைவு. ஆனால், அதையும் தாண்டி தமிழக அரசும் காரணம் என்று சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில், தமிழ்ச் சாலை பண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் போராடினார்கள்.இதுபற்றி தமிழ்ச் சாலை பண்பாட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பையா, ''இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. ஒரு வருடத்தில், தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை 16,000 பேர். சாலை விபத்துகளால் காயம் அடையக்கூடியவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் பேர். இந்த சாலை விபத்துகளுக்கு கவனக்குறைவு மட்டும் காரணம் அல்ல. அரசும் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. 50 வருடங்களுக்கு முன், தனியார் பேருந்துகளுக்கு போட்ட வழித்தட உரிம நேரத்தை மாற்றாமல், அதே வழித்தட உரிம நேரத்திலேயே தனியார் பேருந்துகள் செல்வதனாலேயே, தமிழகத்தில் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, எங்க ஊரான ஜலகண்டாபுரம் டு சேலம் 40 கி.மீட்டரை 45 நிமிடத்தில் தனியார் பேருந்துகள் செல்ல வேண்டும். இதற்கிடையில் 15 பஸ் நிறுத்தங்களில் நின்று செல்லவேண்டி இருப்பதால், தனியார் பேருந்துகள் 80 டு 100 கி.மீட்டர் வேகத்தில் பறக்கவேண்டி இருக்கிறது. இதனால், சாலையோரத்தில் நடந்துசெல்பவர்களும், டூ வீலரில் போகக் கூடியவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல் விபத்தில் சிக்கி மரணம் அடைகிறார்கள்.
Salem:
ஒரு வாரத்தில் மட்டும் ஜலகண்டாபுரத்தில் இரண்டு பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். 4 பேர் காயம் அடைந்திருக்கிறார். இந்தச் சாலை விபத்தில், ஜலகண்டாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற ஶ்ரீமதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். இவர், 10-ம் வகுப்பில் 494 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்தவர். இவரைப் போல விலை மதிக்க முடியாத மனிதர்களெல்லாம் சாலை விபத்தில் பலியாகியிருக்கிறார்கள். அதனால், தமிழக அரசு உடனடி கவனம் செலுத்தி, தனியார் பேருந்துகளுக்கான உரிம நேரத்தை மாற்றி அமைத்துத் தருவதோடு ஒன்றிய, நகர, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள முதன்மைச் சாலைகளில் நடைபாதை அமைத்துத் தர வேண்டும்'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
40 கி.மீட்டரை 45 நிமிடத்தில் கடக்கும் தனியார் பேருந்துகள்! அதிரும் ஜலகண்டாபுரம் டு சேலம் சாலை
TAGS :
COMMENTS