[ad_1]
புதுச்சேரியில், 3 அரசுப் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. அதேபோல, ஒப்பந்த அடிப்படையில் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் புதுச்சேரி அரசுப் பேருந்து பணிமனையில் இடப் பற்றாக்குறை நிலவிவருவதால், வெங்கட்ட சுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே உள்ள தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில், புதுச்சேரி அரசு பேருந்துகள் நிறுத்திவைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை, பணிமனையில் நிறுத்திவைக்கப்படிருந்த 3 பேருந்துகளுக்கு சில மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணிமனை ஊழியர்கள், தீயணைப்புத்துறை மற்றும் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் ஒரு பேருந்து முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மற்ற இரு பேருந்துகளிலும் இருக்கைகள் மற்றும் ஒரு பகுதி முற்றிலும் எரிந்து விட்டன. இந்தப் பேருந்துகளின் மதிப்பு சுமார் 1.50 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. பேருந்துக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர். சில மாதங்களுக்கு முன், இந்தப் பணிமனையில் நிறுத்திவைக்கபட்டிருந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்துக்கும் இதேபோல தீ வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் 3 அரசுப் பேருந்துகள் தீ வைத்து எரிப்பு..!
TAGS :
COMMENTS