[ad_1]







மூன்று தலைமுறைகளாக அரசு எங்களுக்கு எந்த ஓர் அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. என்கிறார்கள் சேலம் பொன்னம்மாபேட்டை ரயில்வே லைன் வடக்குத் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட செல்வியிடம் கேட்டபோது, 'நாங்க சேலம், பொன்னம்மாபேட்டை ரயில்வே லைன் வடக்குத் தெருவில் 3 தலைமுறைகளுக்கு மேல், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். தற்போது நாங்கள் வசித்துவரும் பகுதி ரயில்வே அலுவலகத்துக்குச் சொந்தமானது என்கிறார்கள். இது எங்களுடைய குடியிருப்புப் பகுதி என்பதற்கு ஆதாரமாக, ஆங்கிலேயர் காலத்தில் கொடுத்த செம்புப் பட்டையம் இருக்கிறது. நாங்கள் குடியிருக்கும் பகுதி ரயில்வே துறைக்குச் சொந்தமானது என்று காரணம் காட்டி, சேலம் மாநகராட்சிக்குள் இருந்தும், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்துவருகிறோம். ரயில்வே ரோட்டில் ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் ஒரு மறுபுறமும் திறந்த வெளியில் மலம் கழிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. ரயில்வே போலீஸ் பிடித்தால் 200 ரூபாய் அபராதம் போடுவார்கள். அதைக் கட்டிவிடுவோம். ஆனால், எங்களுக்கு பொதுக்கழிப்பிட வசதி கிடையாது.மழை பெய்தால் வீட்டிக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. மழை நீரோடு பாம்பு, பூரான், தேள் போன்றவைகளும் வீட்டுக்குள் புகுந்துகொள்கிறது. இதனால், நாங்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகிறோம். எங்கள் குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். மின்சார வசதி வேண்டும் என்று எழுதிக் கொடுத்தால், ரயில்வே நிலத்தில் குடியிருக்கும் உங்களுக்கு மின்சார வசதி செய்து கொடுக்க முடியாது என்கிறார்கள். இதுதொடர்பாக நாங்கள் பலரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவே, இறுதியான போராட்டம். மீண்டும் எங்களுக்கு மின்சாரம் கொடுக்கவில்லை என்றால் ஊரே தீக்குளிப்போம்' என்றார்.



இதுபற்றி முன்னாள் கவுன்சிலர் தெய்வலிங்கம் கேட்டபோது, 'சேலம் பொன்னம்மாபேட்டை ரயில்வே லைன் வடக்குத் தெருவில் குடியிருக்கும் மக்களின் நிலம் என்பதற்கான அவர்களிடம் பல ஆதாரங்கள் வைத்திருக்கிறார்கள். முதலில் அரசு மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். ஆனால், 3 தலைமுறைகளாகக் கழிப்பிடம், மின்சாரம், குடிநீர் வசதி செய்து கொடுக்காமல் இருப்பது தவறானது' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");