[ad_1]
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு 17 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்து திருப்பி எடுத்த 35 ஆயிரம் நிறுவனங்களின் பதிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
கடந்த ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, மக்களிடம் இருந்த புழக்கத்தில் இருந்த நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டன. இந்த நேரத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான தொகையை வங்கிகளில் டெபாசிட் செய்து மீண்டும் திருப்பி எடுத்துள்ளன. அதில், ஒரு நிறுவனத்தில் வங்கிக் கணக்கில் மட்டும் 2,484 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு திரும்பிஎடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 8-ம் தேதிக்கு முன்னர் இந்த வங்கிக் கணக்கில் மைனஸில் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. இதைப்போல மற்றொரு நிறுவனம் 2,134 வங்கிக் கணக்குகள் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த 35,000 நிறுவனங்களின் பதிவையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக குறித்து அமலாக்கத்துறைக்கு தெரிவித்துள்ளதாக மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிறுவனங்களின் பெயரில் சொத்துகளை பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது என மாநில அரசுகளை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத 2.24 லட்ச நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் போலி நிறுவனங்கள் என்று அடையாளப்படுத்தப்படும் நிறுவனங்கள் குறித்த தகவலை அரசு ஆவணங்களில் இருந்து நீக்கவும் நடவக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக தங்கள் நிறுவனத்தின் வருமான கணக்குகளை தாக்கல் செய்யத் தவறிய 3.09 லட்சம் இயக்குனர்களையும் மத்திய அரசு தகுதிநீக்கம் செய்திருப்பதாக நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
35 ஆயிரம் நிறுவனங்களின் பதிவு ரத்து..! மத்திய அரசு அதிரடி
TAGS :
COMMENTS