[ad_1]

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருக்கத்தில் உயிரிழந்த பாட்டியிடம் 32 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்துள்ளது.




விழுப்புரம் மாவட்டம் தியாகதுருக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லஷ்மி. அவருக்கு வயது 75. கணவர், பிள்ளைகள் இல்லாதவர் வயது முதிர்ச்சியின் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். அதன்பிறகு, அவருடைய வீட்டிலுள்ள பொருள்கள் வெளியே எடுக்கப்பட்டன. அப்போது, அவர் வீட்டில் 32 ஆயிரம் ரூபாய் மதிப்புக்குப் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்துள்ளது. அவருடைய இறுதிச் சடங்குக்காக, அந்தப் பாட்டி லஷ்மி சிறுகச் சிறுகச் சேர்ந்திருக்கலாம். பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட விவரம் தெரியாமல் அதனை அப்படியே வைத்திருந்திருக்கலாம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிறுகச் சிறுக அவர் சேமித்த பணம், அவரது இறுதிச் சடங்கிற்கே பயனில்லாமல் போனது .