[ad_1]
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 8 மீனவர்களையும் இம்மாதம் 30-ம் தேதி வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற சண்முகவேல், முனியாண்டி, தர்மராஜ்,நடராஜன் ஆகிய 4 மீனவர்கள் மற்றும் ராமேஸ்வாத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற ஜெய்லஸ், மெல்சன், விஜய், நவீன் ஆகிய 4 மீனவர்கள் என ஆக மொத்தம் 8 மீனவர்களை இன்று அதிகாலை இலங்கை கடற்படை கைது செய்தது. விசாரணைக்கு பின் இவர்களை இலங்கை கடற்படையினர் யாழப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட மீனவர்களை மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் இன்று விடுமுறை என்பதால் ஊர்காவல்துறை நீதிமன்ற பதில் நீதிபதி ஜாய்மஹில்மகாதேவன் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை வரும் நவம்பர் 30-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்களுக்கு 30-ம் தேதி வரை காவல்!
TAGS :
COMMENTS