[ad_1]
டிரைசைக்கிளில் ராட்சத காளான்களை எடுத்துக்கொண்டு தேனி நகரின் தெருக்களில் வலம் வந்து கொண்டிருந்தார் கூடலூர் முருகேசன். பார்க்க பிரம்மாண்டமாக காட்சியளித்த வெள்ளை நிற பொருளாகவே முதலில் நம் கண்களில் பட, அருகில் சென்று பார்த்தபின்தான் அது காளான் என்பது தெரிந்தது. இவ்வளவு பெரிய காளானா? என்று அதிர்ச்சியடைய மளமளவென பேச ஆரம்பித்தார் முருகேசன், “கம்பம் பள்ளத்தாக்கு சுருளி அருவிக்கு அருகில்தான் இந்த காளான்கள் கிடைக்கும்.
மழைக்காலத்தில் எப்போதாவதுதான் இப்படி ராட்சத காளான்களைப் பார்க்க முடியும். சுருளி அருவியின் அருகே எங்கு கிடைக்கும், எந்த நாள்களில் கிடைக்கும் என்பது தொழில் ரகசியம்! பொதுவாக உள்ளூரில் கிலோ 100 ரூபாய்க்கு விற்போம். தேனி வந்தால் விலை 300! இந்த ஒரு காளான் மட்டும் 3 கிலோ. சந்தேகம் இருந்தால் எடைபோட்டுப் பார்த்து காசு கொடுங்கள்.!” என்றவரிடம் ஐந்து கிலோ எடை கொண்ட ராட்சத காளான்களும் இருந்தன.
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட காளான்களை வாங்கிப் பழகிய நமக்கு, முருகேசன் வைத்திருந்த காளான்களைப் பார்க்க சற்று பயமாக இருந்தாலும், இயற்கையாக காடுகளில் வளர்ந்த சத்து மிகுந்த காளான்கள் அவை என்பதுதான் உண்மை.
ராட்சத காளான்... கிலோ 300 ரூபாய்!
TAGS :
COMMENTS