[ad_1]
Salem:
பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுத்துறையில் தனிக் கவனம் செலுத்திவரும் நிலையில், சேலம் அரசு காந்தி ஸ்டேடியம் விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், மாதம் 250 ரூபாய் செலுத்த வேண்டும் என்று மாவட்ட விளையாட்டுத்துறை அறிவித்திருக்கிறது. இது, நடைப்பயிற்சி செய்யக்கூடியவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுதியுள்ளது. சேலம் பா.ஜ.க-வும் இந்ப்த பிரச்னையைக் கையில் எடுத்திருக்கிறது.இதுகுறித்து பா.ஜ.க மாவட்டச் செயலாளர் கோபி கூறுகையில், ''சேலம் மாநகராட்சிக்குள் இருக்கும் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு மரம் வைப்பதற்குகூட இடம் கிடையாது. பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுபவர்கள்கூட பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், மக்கள் உடல் அசைவுகள் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால், பல வியாதிகள் ஏற்படுகின்றன. 30 வயதைத் தாண்டிவிட்டாலே உணவு செரிமானப் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு, நிச்சயம் நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் தேவைப்படுகிறது. ஆனால், சேலம் மாநகருக்குள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வதற்கு எங்கேயும் இடமில்லை. சாலை ஓரமாக நடக்கலாம் என்றால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் அங்கு நடக்க முடியாது. பெண்கள் சாலைகள், தெருக்களில் நடப்பது பாதுகாப்பு கிடையாது.இந்த நிலையில், சேலம் மாநகரில் உள்ள மக்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள அரசு காந்தி விளையாட்டு மைதானம்தான் இருக்கிறது. இங்கு பெரும்பாலும் ஏழை, நடுத்தர மக்கள் உடற்பயிற்சி செய்வதற்காக வருகிறார்கள். வசதி படைத்தவர்கள் தனியார் கிளப்புகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். காந்தி விளையாட்டு மைதானத்துக்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வரும் ஏழை, எளிய மக்களிடம், நடப்பதற்காக மாதம் 250 ரூபாய் வசூலித்தால் நிச்சயம் அவர்களால் அந்தத் தொகையைக் கட்டமுடியாது. அவர்கள் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிடுவார்கள்.
நடைப்பயிற்சி செய்யக்கூடியவர்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். மாறாக, மாவட்ட விளையாட்டுத்துறை நடைப்பயிற்சிக்குப் பணம் அறிவிப்பதுமூலம் நடைப்பயிற்சிக்குத் தடைபோடுவதுபோல இருக்கிறது. நடைப்பயிற்சிக்கு பணம் வசூலிக்ககூடாது. எனவே, மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு புகார்களை அனுப்ப இருக்கிறோம்'' என்றார். இதுபற்றி மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் கனகராஜிடம் கேட்டபோது, ''மாநில விளையாட்டுத்துறை அறிவித்திருக்கிறது. அதை அமல்படுத்துவது என்னுடைய கடமை. நாளை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களிடம் வசூலிக்கும்போது, அதன் எதிர்வினை என்னவென்பது தெரியவரும். அப்படி எதிர்ப்புகள் வரும் பட்சத்தில், அதை எங்கள் துறையின் கவனத்துக்குக் கொண்டுசெல்லுவேன்'' என்றார்.
'30 வயதைத் தாண்டினாலே இப்போது பிரச்னைதான்'- நடைப்பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க பா.ஜ.க எதிர்ப்பு
TAGS :
COMMENTS