[ad_1]





பீகார் மாநிலம் பேகுசாரை மாவட்டத்தில் கார்த்திகா பூர்ணிமா தினக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூன்று பேர் உயிரிழந்தனர். 





பீகார் மாநிலம் பேகுசாரை மாவட்டத்தில் கங்கைக் கரையின் ஓரத்தில் கார்த்திகா பூர்ணிமா விழா கொண்டாட்டம் நடைபெற்றுவந்தது. அந்த விழாவுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட வதந்தியின் காரணமாக பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 4 லட்ச ரூபாய் ஒதுக்கி முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து லல்லு பிரசாத் யாதவ் ட்விட்டர் பதிவில், 'கார்த்திகா பூர்ணிமா திருவிழாவில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்