[ad_1]
ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்புத் தேதியை, சி.பி.ஐ நீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார் ராஜா. அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டினால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி-யுமான கனிமொழி ஆகியோர்மீது குற்றம் சாட்டப்பட்டு ள்ளது. இந்நிலையில், 2ஜி வழக்கு தொடர்பான வாதங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, நவம்பர் 7-ம் தேதி 2ஜி வழக்கின் தீர்ப்புத் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது சி.பி.ஐ நீதிமன்றம். எனவே, பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டுவந்த வழக்கின் தீர்ப்பு, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
2ஜி வழக்கு... தீர்ப்புத் தேதி இன்று அறிவிப்பு!
TAGS :
COMMENTS