[ad_1]





இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது.




இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸை வென்ற இலங்கை அணி, இந்தியாவை பேட்டிங் செய்யச்சொல்லி பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. புஜாரா அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். இலங்கையின் லக்மால், அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை, 294 ரன்கள் குவித்தது. பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 352 ரன்கள் எடுத்து, இலங்கைக்கு இலக்காக 231 ரன்கள் நிர்ணயித்தது. கடைசி நாளான இன்று களமிறங்கிய இலங்கை, ஒரு கட்டத்தில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால், ஆட்ட நேரம் முடிந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டு இன்னிங்ஸிலும் புவ்னேஷ்வர் குமார், தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர், ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


நாக்பூரில் இன்று நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. இன்றைய போட்டியில், ஷகிர் தவானுக்குப் பதில் தொடக்க வீரராக முரளி விஜய் களமிறங்க உள்ளார். முகமது ஷமிக்குப் பதில் இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமாருக்குப் பதில் ரோகித் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");