[ad_1]





Chennai: 

தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி ஆகியோரை பதவிநீக்கம் செய்யக்கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.


"சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைபெற்றுவந்தபோது இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் என்று நாங்கள் பொய் சொன்னோம். இதற்காக நாங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். மேலும், வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

இந்த நிலையில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி ஆகியோரை பதவி நீக்கம் செய்யக்கோரி மனோகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் கே.வி.வீரமணி ஆகியோர், ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்துவிட்டு, ஜெயலலிதா சிகிச்சை தாெடர்பான விவரங்களைக் கூறியுள்ளனர்.  அதனால், அமைச்சர்கள் இரண்டு பேரையும் பதவிநீக்கம் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.


இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநரின் அதிகார எல்லையில் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏற்கெனவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறி, மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்