[ad_1]
Kancheepuram: தமிழகத்தில் சசிகலா மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இரண்டாவது நாளாக இன்றும் சில முக்கிய இடங்களில் மட்டும் சோதனை தொடர்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் உள்ள சசிகலா குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையில் நேற்று காலை 6.30 மணிக்கு வருமான வரித்துறையினர் நுழைந்தனர். அப்போதிலிருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பணியில் இருந்தவர்களையும் வெளியேற்றவில்லை. இதனால் காலையிலிருந்தே வெளியில் இருந்து வந்த பணியாளர்கள் உள்ளே செல்ல முடியாமலும், உள்ளே இருந்த பணியாளர்கள் வெளியே செல்ல முடியாமலும் ஓரிடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.மதியம் 2.30 மணிக்கு அதிகாரிகள் அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்கள். இதைத் தொடர்ந்து பத்து நிமிடத்திலேயே அந்த பணியாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார்கள். ஆனால், நள்ளிரவு வரை ரெய்டு தொடர்ந்தது. இரவு 11.30க்கு ரெய்டு முடிந்ததும், ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்து டாக்குமெண்டுகளை அதிகாரிகள் அள்ளிக்கொண்டு போனார்கள். அதைத்தொடர்ந்து மிடாஸ் மதுபான ஆலை உள்ளே யாரும் நுழையாதவாறு இரவிலிருந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இன்று காலை 11.30க்கு இரண்டு கார்களில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறையினர், மிடாஸ் கம்பெனி உள்ளே நுழைந்திருக்கிறார்கள். மிடாஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாக அலுவலர்களை கம்பெனிக்கு வரவழைத்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இரண்டாவது நாளாகத் தொடரும் ரெய்டின் காரணமாக மூன்று நாள்கள் மிடாஸ் நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஆம்புலன்ஸில் பறந்த டாக்குமென்ட்! : 2-வது நாளாக தொடரும் மிடாஸ் ரெய்டு
TAGS :
COMMENTS