[ad_1]
விழுப்புரம் அருகே நள்ளிரவில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்து நிகழந்துள்ளது. இதில், பேருந்துகளில் பயணம் செய்த 28 பேர் காயமடைந்தனர். இந்தக் கோர விபத்தால் விழுப்புரம் புறவழிச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரம் பகுதி புறவழிச்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து இந்த விபத்தில் சிக்கின. விபத்து நடந்தது நள்ளிரவு நேரம் என்பதால் அதில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருந்தனர்.
இந்த விபத்து நடந்ததும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்த போலீஸார், விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகே இருந்த விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விழுப்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அருகே பேருந்து விபத்து..! 28 பேர் படுகாயம்
TAGS :
COMMENTS