[ad_1]
இந்தியாவில் சாதி, மத மோதல்கள் இல்லாமல் அமைதியாக மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக ராதிகா ராவ் என்ற 26 வயது பெண் இந்தியா முழுவதும் பைக் பயணத்தைக் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கினார். பாண்டிச்சேரி போகும் வழியில் இன்று சேலத்திற்கு வந்திருந்தார்.
அப்போது அவரைச் சந்தித்தோம். இதுப்பற்றி ராதிகா ராவ்விடம் பேசிய போது, 'என் அப்பா பேரு ஜனார்த்தனன், அம்மா பூர்ணிமா, எனக்கு சரஸ்வதி என்ற ஒரு தங்கை இருக்கிறார். நான் பி.காம்., முடித்து விட்டு போட்டோ கிராஃபி மீது ஆர்வம் ஏற்பட்டதால், நான் போட்டோ கிராஃபராக இருக்கிறேன். இந்தியாவில் தொடர்ந்து சாதி, மத மோதல் இருந்து வருகிறது. அதனால் இந்தியாவின் அமைதிக்காக நான் இந்தியா முழுவதும் பைக் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டேன்.
முதலில் இந்தத் திட்டத்தை அப்பாவிடம் சொன்னேன். அப்பா என்னிடம் ஃப்ரெண்ட்லியாக இருப்பதால் என் திட்டத்திற்கு அவர் தடை போடவில்லை. ஊக்கப்படுத்தினார். ஆனால், அம்மா ஆரம்பத்தில் தனியாக என்னை அனுப்புவதற்கு சங்கடப்பட்டார். பிறகு அவரும் கிரீன் சிக்னல் காட்டினார். அதையடுத்து நான் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி சென்னையில் என் பயணத்தை தொடங்கினேன். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பயணம் செய்வேன். பிறகு தெரிந்த இடத்தில் அன்று இரவு தங்கிக் கொள்ளுவேன்.
இந்தியா முழுவதும் 29 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டும் என்பது என் திட்டம். இதுவரை 29 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 26,500 கி.மீ. கடந்து விட்டேன். இன்னும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மட்டும் செல்ல வேண்டும். இந்த பயணத்தை முடித்து விட்டு இறுதியாக வரும் நவம்பர் மாதம் 19-ம் தேதி சென்னையில் என் பயணத்தை நிறைவு செய்யவிருக்கிறேன்.
பயணம் மிகவும் அற்புதமாக இருந்தது. மொபைலில் ஜி.பி.எஸ்., பயண்படுத்தி வழி கண்டுபிடித்து போக மாட்டேன். அங்கிருக்கும் பொதுமக்களிடம் வழி கேட்டுப் போவேன். ஒவ்வொரு 200 கி.மீட்டரில் புதுவிதமான மனிதர்களைச் சந்தித்தேன். மொழி, நிறம், தட்பவெப்ப நிலை, கலாசாரம், பண்பாடு வேறுபட்டிருந்தாலும், மனிதநேயம் அனைவரிடமும் இருந்ததைப் பார்க்க முடிந்தது. பயணத்தில் பல சுவாரஸ்யங்கள், ஆபத்துகள் நிறைந்திருந்தன. அதில் கிடைத்த அனுபவங்கள் மறக்க முடியாதவை. அனைத்தையும் புகைப்படமாக எடுத்திருக்கிறேன். என் பயணம் முடிந்ததும் புகைப்படக் கண்காட்சி வைக்க திட்டமிட்டிருக்கிறேன்'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஜி.பி.எஸ். துணையில்லாமல் பைக்கில் 26,500 கி.மீ! அமைதிப் பயணத்தின் ரகசியம் சொல்லும் ராதிகா ராவ்
TAGS :
COMMENTS