[ad_1]
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே தனியார் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஒரகடத்தை அடுத்த பண்ருட்டி பகுதியில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்தவழியாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்றை நிறுத்த அவர்கள் முயற்சித்தபோது, அது நிற்காமல் சென்றிருக்கிறது. இதையடுத்து, அந்த லாரியை மடக்கிப் பிடித்த போலீஸார், அதைச் சோதனையிட்டதில் டைல்ஸ் கற்களுக்கு மத்தியில் செம்மரக் கட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. லாரியின் ஓட்டுநரைக் கைதுசெய்து அவரிடம் விசாரித்ததில், அந்தப் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் மேலும் சில கண்டெய்னர் லாரிகளில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டறிந்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்த போலீஸார், 3 பேரைக் கைதுசெய்து, 25 டன் செம்மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடமிருந்த 5 கண்டெய்னர் லாரிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஒரகடம் அருகே ரூ.25 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
TAGS :
COMMENTS