[ad_1]
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலையால், அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் மழை வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. டெல்டா பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், பல்லாயிரம் ஏக்கரில் விளைந்த பயிர்கள் நீரில் மிதக்கின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், 'தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும்' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும் வடமாவட்டங்களில் மழை நீடிக்கும் என்றும் சென்னையில் இடைவெளி விட்டு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார். நேற்று, இலங்கை அருகே புதிதாக உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை, தற்போது வலுவிழந்துள்ளது. ஆனால், வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால், இரண்டு நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
அடுத்த 24 மணி நேரத்தில் மழை வலுப்பெறும்: வானிலை மையம் எச்சரிக்கை
TAGS :
COMMENTS