[ad_1]

Chennai: ரேஷன் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து, தி.மு.க சார்பில் நவம்பர் 6-ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறும் என்று  தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 




 


தமிழகத்தில் ரேஷனில் வழங்கப்படும் ஒரு கிலோ சர்க்கரையின் விலை ரூ.13.50-லிருந்து 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதியிலிருந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ரேஷன் சர்க்கரையின் விலை உயர்வைக் கண்டித்து நவம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், அந்தச் சமயத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்ததால் ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைப்பதாக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “சர்க்கரை விலை உயர்வை அறிவித்துள்ள அ.தி.மு.க அரசைக் கண்டித்தும் பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான மானியத்தை ரத்து செய்வதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");