[ad_1]





கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள நடிகர் திலீப் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் வரும் 21-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் திலீப் 8-வது குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார்.
கேரளாவை பரபரப்புக்கு உள்ளாக்கிய நடிகை கடத்தல் சம்பவம், பிப்ரவரி 17-ம் தேதி நடைபெற்றது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீஸார் பல்சர் சுனில் என்றபரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஆலுவா சப்-ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் நீதிமன்றம் அளித்த ஜாமீனுக்கு பின்னர் வெளியில் வந்தார்.  இந்த வழக்கில் நடிகர் திலீப் மற்றும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் உள்ளிட்ட பலரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அத்துடன், அதிரடி சோதனைகளை நடத்தி முக்கிய ஆவணங்களையும் போலீஸார் கைப்பற்றினர். 300 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று உள்ளது. அவர்களையும் இந்த வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன், போலீஸார் கைப்பற்றிய செல்போன் உரையாடல் உள்ளிட்ட 400 ஆவணங்களும் வழக்கின் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாக உள்ளது. இந்த நிலையில், நடிகர் திலிப் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், துபாயில் தனது நிறுவனத்தின் ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்க இருப்பதால், கோர்ட் பாதுகாப்பில் உள்ள தனது பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும் என கோரியிருந்தார். அதனால், நீதிமன்றம் அவரை வெளிநாடு செல்ல அனுமதித்து விடுமோ என நினைத்த போலீஸார், உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, பல்சர் சுனிலுடன் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக நடிகர் திலீப்பை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். மொத்தமாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள 11 பேரில் 8-வது குற்றவாளியாக நடிகர் திலீப் சேர்க்கப்பட்ட இருக்கிறார். வரும் செவ்வாய் கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போலீஸார் முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதனால், நடிகை கடத்தல் வழக்கு மீண்டும் சூடி பிடிக்க உள்ளது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");