[ad_1]
சூரியஒளித்தகடு ஊழல் விவகாரத்தில் சரிதா நாயரிடமிருந்து கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி ரூ.2.10 கோடி லஞ்சம் பெற்றதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல் கருவிகள் அமைத்துத் தருவதாக, கேரள மாநிலத்தில் பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. சரிதா நாயரின் டீம் சோலார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்குவதற்காக, கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி சலுகைகள் அளிக்க லஞ்சம் பெற்றதாகச் சொல்லப்பட்டது. சரிதா நாயர் கேட்டுக்கொண்டதன்படி, புதிய சூரிய ஒளி மின்சார உற்பத்திக் கொள்கையை உம்மன் சாண்டி அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டதாகவும் அதன் வழியாக ஒப்பந்தங்களைப் பெற சரிதா முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த ஊழல் தொடர்பாக நீதிபதி சிவாராஜன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு கேரள அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதில், சலுகைகள் அளிக்க உம்மன் சாண்டி 2.10 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும் லஞ்சப் பணம் அவருக்கு வேண்டியவர்கள் வழியாக மூலம் பல தவணைகளாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
1,073 பக்கம் கொண்ட அறிக்கையில், '' உம்மன் சாண்டியின் வழிகாட்டுதல் படி, அவரின் உதவியாளர்கள் டென்னி ஜோப்பன், ஜிக்குமான் ஜேக்கப், பாதுகாவலர் சலிம்ராஜ் உள்ளிட்டவர்கள் சரிதா நாயர், வாடிக்கையாளர்களை ஏமாற்ற உடந்தையாக இருந்துள்ளனர். உம்மன் சாண்டியின் டெல்லி உதவியாளர் தாமஸ் குருவை வழியாக ரூ. 2.10 லட்ச லஞ்சமாக அளிக்கப்பட்டுள்ளது. சரிதாவுடன் பாலியல்ரீதியாகவும் உம்மன்சாண்டி தொடர்பு வைத்துள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உம்மன் சாண்டி இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். ''நான் ஒரு திறந்த புத்தகமாகவே இருக்கிறேன். நான் எந்தத் தவறும் இழைக்கவில்லை. ஆளும் இடது முன்னணியின் பழிவாங்கும் நடவடிக்கை இது. சோலார் அறிக்கையா அல்லது சரிதா அறிக்கையா? எந்த விதமான விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன்'' என அவர் கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
சரிதா நாயரிடம் உம்மன் சாண்டி ரூ. 2.10 கோடி லஞ்சம் பெற்றார்- விசாரணை அறிக்கையில் பகீர் | Solar scam
TAGS :
COMMENTS