[ad_1]
20 ஓவர் கிரிக்கெட் அணியில் மகேந்திர சிங் தோனி நீடிக்க வேண்டுமா என்பதுகுறித்து பலர் கருத்து கூறிவரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிகெட் வீரர் வீரேந்திர சேவாக், `20 ஓவர் கிரிக்கெட்டில் தோனியின் ரோல்குறித்து அணியின் நிர்வாகம்தான் தெளிவுபடுத்த வேண்டும்' என்று கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து சேவாக், `தோனிக்கு அவரது ரோல் என்ன என்பதுகுறித்து தெரிய வேண்டும். இரண்டாம் இன்னிங்ஸில் அதிக ரன்களை சேஸ் செய்யும்போது, அவர் ஆரம்பத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தைக் கடைபிடிக்க வேண்டும். இதைப்பற்றி அணியின் நிர்வாகம்தான் அவருக்கு புரியவைக்க வேண்டும். இந்தக் கணத்தில், இந்திய அணிக்கு தோனி மிகவும் தேவைப்படுகிறார். டி20 கிரிக்கெட்டுக்கும் அவர் தேவைப்படுகிறார். சரியான நேரம் வரும்போது அவர் அணியிலிருந்து தானாகவே விடைபெற்றுக்கொள்வார். எந்தவொரு இளம் வீரரின் பாதையிலும் அவர் நிற்க மாட்டார். அவரைப்போன்ற ஒரு கிரிக்கெட் வீரருக்கு மாற்றாக ஒருவரை இந்திய அணி இன்னும் கண்டுபிடிக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
டி20 அணியில் தோனி நீடிக்க வேண்டுமா? - சேவாக் கருத்து!
TAGS :
COMMENTS