[ad_1]





Coimbatore: கோவை, ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலசுப்பிரமணியம். அவர் சித்தாபுதூரில் பொதுமக்களுக்கு 20 ரூபாயில் மருத்துவம் பார்த்துவந்தார்.  தொடக்கத்தில் இரண்டு ரூபாய் மட்டுமே வாங்கியவர், கடைசியாக நோயாளிகளிடம் வாங்கிய மருத்துவ கட்டணம் 20 ரூபாய் மட்டுமே.


 


’20 ரூபாய் மருத்துவர்’ என்று கோவை மக்களால் அழைக்கப்பட்டவர், பலத்த எதிர்ப்புக்கிடையே , தன்னை நம்பி வரும் மக்களுக்கு மருந்து உட்பட இருபது ரூபாய் மட்டுமே வாங்கி வைத்தியம் பார்த்துவந்துள்ளார். குறிப்பாக, கஷ்டப்படுகிறவர்களிடம் அந்த இருபது ரூபாய் கூட வாங்கியது கிடையாது. ஒருமுறை கட்டணம் வாங்கிவிட்டால், அடுத்தடுத்த நாள்களில் தொடர்ந்து வந்தாலும் கட்டணம் கேட்க மாட்டார். நம்பி வருபவர்கள் ஏமாந்து போகக்கூடாது என்பதற்காக, விடுப்பே எடுக்காமல் நோயாளிகளின் மீது அக்கறை காட்டியவர்.இப்படிப்பட்ட மருத்துவரை, கடந்த ஆண்டு காலன் நம்மிடம் இருந்து பிரித்துவிட்டான். கடந்தாண்டு (19.11.2016) நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு பாலசுப்பிரமணியம் காலமானார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.


 

மக்கள் மருத்துவர், மக்களின் மனதில் நீங்க இடம்பெற்றிருக்கிறார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அவர் இறந்து ஓராண்டுக்கு பின்பும் மருத்துவம் பார்த்துவந்த அறையின் முன்பு உள்ள சாலையில் அவருக்கு, நேற்று முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்  மெழுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதோடு, அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்..


இதுகுறித்து சிங்காநல்லூரைச் சேர்ந்த குமரன் கூறுகையில், ’எங்க மருத்துவர் இருந்தவரை, என்னிடம் வைத்தியம் செய்ய ஒருமுறைக் கூட காசு  வாங்கியதில்லை. எனக்கு மட்டுமல்ல என்னுடைய பேரன், பேத்திகளுக்கும் அவர்  வைத்தியம் பார்த்துள்ளார். தற்போது மருத்துவர் இல்லாததால், காய்ச்சலுக்கே 500 முதல் 1000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");