[ad_1]

2018-ம் வருடத்தின் அரசு விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. வருடந்தோறும் அரசு விடுமுறை தினங்களை மொத்த பட்டியலாக முன்கூட்டியே அறிவிப்பது வழக்கம். இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் 52 நாள்களே மிச்சம் இருக்கின்றன. இந்நிலையில், புதிதாக பிறக்க இருக்கும் 2018-ம் வருடத்திற்கான அரசு விடுமுறை தினங்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, மொத்தம் 23 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதில் 4 நாள்கள் ஞாயிற்றுகிழமையில் வருகிறது. மற்றவை வார நாள்கள் மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்றுள்ளது. தொடக்க விடுமுறையாக புத்தாண்டு தினம் திங்கள் கிழமையில் வருகிறது. பொங்கல் விடுமுறை ஞாயிற்றுக்கிழமையும், தீபாவளி செவ்வாய் கிழமையிலும் வருகிறது.