[ad_1]
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 20,000 ஹெக்டேரில் நெல் நடவுப் பணிகள் நடைபெற்று உள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் நெல்லை மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியிருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 112 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நிர்மட்டம் 85 அடியை எட்டியிருக்கிறது. அத்துடன் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் பாபநாசம் அணைக்கு 1356 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்துக்காக அணையிலிருந்து 918 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையில் நீர் வெளியேற்றப்படவில்லை. மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படாத நிலையில், 174 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளின் நீர் மட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழையின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடிப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக நெல்லை மாவட்ட வேளாண் இணை இயக்குநரான செந்தில்வேல் முருகன் கூறுகையில், ‘’வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு 60,000 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது., இதுவரை 20,000 ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. விவசாயத்துக்குத் தேவையான உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
நெல்லை மாவட்டத்தில் பெய்யும் மழையால் 20,000 ஹெக்டேரில் நெல் நடவுப் பணிகள்!
TAGS :
COMMENTS